Sunday, 9 June 2013

கேன்ஸ் திரைப்பட விழாவில் அத்தனை கண்களும் ஐஸ்வர்யா மீது தான்!

பாரிஸ்: கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் சிக்கென்று அழகுப் பதுமையாக வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார். தற்போது பிரான்ஸில் நடந்து வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் 12வது முறையாக கலந்து கொண்டுள்ளார். அவர் தனது மகள் ஆராத்யாவுடன் கேன்ஸ் சென்றுள்ளார். குழந்தை பிறந்த பிறகு ஐஸ்வர்யா குண்டாக இருந்தார். கடந்த ஆண்டு நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட அவர் குண்டாக இருந்தது தான் மீடியாக்களின் முக்கிய செய்தியாக இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டுள்ள ஐஸ்வர்யா அனைவரையும் அசத்தியுள்ளார்.


No comments:

Post a Comment