Tuesday, 18 June 2013

லாரன்சின் முனி-3 கங்கா படத்திலும் நடிக்கிறார் அஞ்சலி!

Tamil Actress Anjali Latest Stillsமுனி படத்தின் இரண்டாம் பாகமான காஞ்சனாவை பெரிய ஹிட் படமாக கொடுத்த ராகவா லாரன்ஸ், அப்படத்தின் மூன்றாம் பாகமான கங்கா படத்தை இன்னும் பெரிய அளவில் வெற்றிப்படமாக கொடுத்து விட வேண்டும் என்று நினைக்கிறார். அதனால்தான், இரண்டாம் பாகத்தை முடித்த கையோடு மூன்றாம் பாகத்தின் வேலைகளில் இறங்காமல், பல மாதங்களாக அதற்கான கதை விவாதத்தை நடத்தி வந்தார்.
மேலும், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படத்தை இயக்கும் லாரன்ஸ், தமிழ்ப்பதிப்பில் ஹீரோயினியாக நடிக்க டாப்ஸியை புக் பண்ணிவிட்டவர், தெலுங்கில்தான் சில மாதங்களாக தனது கதைக்கு பொருத்தமான நடிகையை தேடி வந்தார். ஆனால், இவர் கால்சீட் கேட்க நினைக்கும் நடிகைகள் வருடக்கணக்கில் தங்கள் கால்சீட் டைரியை புல் பண்ணி வைத்திருக்கிறார்களாம். அதனால், இப்போது அஞ்சலியை தெலுங்கு பதிப்புக்கு புக் பண்ணி விட்டாராம் லாரன்ஸ்.
தெலுங்கில் பல்பு, கோல்மால் போன்ற படங்களில் நடிக்கும் அஞ்சலி, லாரன்ஸ் படத்தில் நடிப்பதற்காக மொத்த கால்சீட்டாக அள்ளிக்கொடுத்து விட்டாராம். மேலும், டாப்ஸியும் அஜீத்தின் 53வது படத்துக்குப்பிறகு லாரன்ஸ் படத்துக்காக ப்ரீயாக இருந்து வருவதால், மொத்த ஆர்ட்டிஸ்டுகளையும் ஸ்பாட்டில் வைத்துக்கொண்டு படப்பிடிப்பு தொடங்கி விட்டார் லாரன்ஸ்.

No comments:

Post a Comment