Thursday, 13 June 2013

கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா

img1130613035_1_1பீட்சா படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் தனது புதிய படத்துக்கு ஜிகர்தண்டா என பெயர் வைத்திருக்கிறார். இந்தப் பெயரே படம் மதுரை பின்னணியை கொண்டது என்பதை தெரிவித்துவிடுகிறது.
ஜிகர்தண்டாவின் படப்பிடிப்பு நேற்று முறைப்படி தொடங்கியது. சித்தார்த் ஹீரோ, லட்சுமி மேனன் ஹீரோயின். சந்தோஷ் நாராயணன் இசை.
பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிம்கா, கருணா ஆகியோரும் நடிக்கிறார்கள். பீட்சா மாதிரி எதிர்பாராத களத்தில் ஜிகர்தண்டாவும் பயணிக்குமாம்.

No comments:

Post a Comment