Tuesday, 18 June 2013

யாயா’ படம் கிரிக்கெட் சூதாட்டகதையா?: டோனி, ஷேவாக் வேடத்தில் சிவா, சந்தானம்

07b4e878-31f6-406f-bbb8-2a80324d1655_S_secvpf.gifதற்போது தமிழ் சினிமாவில் காமெடி படங்கள் பெரிய அளவில் ஹிட்டாவதால் நிறைய நகைச்சுவை படங்கள் வெளிவருகின்றன. இதனால் காமெடி நடிகர்கள் பிசியாகிவிட்டனர். சம்பளத்தையும் கதாநாயகர்களுக்கு இணையாக உயர்த்தி விட்டனர்.
அதிகம் சம்பளம் வாங்கும் காமெடியர்கள் பட்டியலில் சந்தானம் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் நடிப்பில் 'தீயா வேலை செய்யணும் குமாரு', 'தில்லுமுல்லு' என இருபடங்கள் தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கின்றன.
தற்போது சந்தானமும் சிவாவும் இணைந்து 'யாயா' என்ற படத்தில் நடிக்கின்றனர். இதில் கிரிக்கெட் வீரர்கள் டோனி கேரக்டரில் சிவாவும் ஷேவாக் கேரக்டரில் சந்தானமும் வருகிறார்கள்.
சமீபத்தில் பரபரப்பாக கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாக வைத்து இப்படம் தயாராவதாக பேச்சு அடிபடுகிறது. இதுகுறித்து சிவாவிடம் கேட்டபோது:-
'யாயா படத்தில் எனது கேரக்டரை டோனி என்றும் சந்தானம் கேரக்டரை ஷேவாக் என்றும் அழைப்பதுபோல் காட்சிகள் வைக்கப்பட்டு உள்ளன. கிரிக்கெட்டுக்கும் இப்படத்துக்கும் தொடர்பு இல்லை. படம் பார்க்கும் போது எதற்காக அந்த பெயர்கள் வைக்கப்பட்டன என்பது புரியும்' என்றார்.

No comments:

Post a Comment