Sunday, 30 June 2013

தோள் கொடுக்குமா தேசிங்குராஜா

img1130628038_1_1ஏறக்குறைய ஒரே நேரத்தில் அறிமுகமானவர்கள் விமலும், விதார்த்தும். களவாணி, வாகை சூட வா என்று விமலின் பயணம் உயரே போன போது விதார்த்தின் கேரியர் குளறுபடிகள் நிறைந்ததாக இருந்தது. தனி ஹீரோவாக இன்னமும் தடுமாறிக் கொண்டுதான் இருக்கிறார் விதார்த்.

சிவ கார்த்திகேயன் வந்த பிறகு விமலின் நிலைமை விதார்த்தை போல மோசமானது. கேடி பில்லா கில்லாடி ரங்காவில் இரண்டு பேரும்தான் நடித்தார்கள். விமல் அப்படியே இருக்க, சிவ கார்த்திகேயன் மேலும் மேலும் உயர்ந்து இரண்டு கோடி சம்பளத்தை எட்டியிருக்கிறார்.

விமல் தனது கேரியர் லிஃப்டுக்கு நம்பியிருப்பது எழிலின் தேசிங்குராஜா படத்தைதான். பிந்து மாதவிக்கும் இந்தப் படம்தான் இப்போதைய ஒரே நம்பிக்கை.

காமெடியை மையமாக வைத்துதான் தேசிங்குராஜாவை எழில் இயக்கியிருக்கிறார். விமல் இதில் எம்‌ஜிஆர் ரசிகராக வருகிறார். அவருடன் பிந்து மாதவியும் தன் பங்குக்கு காமெடி செய்திருக்கிறார். உடன், சூ‌ரி. தேசிங்குராஜாவின் பாடல்கள் பரவலான வரவேற்பை பெற்றுள்ளதால் படத்தை வாங்க விநியோகஸ்தர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

‘அன்னக்கொடி’ படத்தை தடை செய்யக்கோரி டைரக்டர் பாரதிராஜா வீடு முன் முற்றுகை

95998b7a-f2a7-402d-92df-715ab99f5370_S_secvpf

'அன்னக்கொடி' திரைப்படத்தை தடை செய்யக்கோரி தேனியில் சினிமா டைரக்டர் பாரதிராஜாவின் வீட்டை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பிரபல சினிமா டைரக்டர் பாரதிராஜா இயக்கத்தில் தேனியை சேர்ந்த புதுமுக நடிகர் லஷ்மண், நடிகை கார்த்திகா ஆகியோர் நடித்த 'அன்னக்கொடி' என்ற திரைப்படம் நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் வெளியானது.

அன்னக்கொடி திரைப்படத்தை கண்டித்தும், அந்த படத்துக்கு தடை விதிக்கக்கோரியும் தேனி மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் நேற்று காலை தேனி என்.ஆர்.டி. ரோட்டில் உள்ள டைரக்டர் பாரதிராஜாவின் வீட்டை முற்றுகையிட வந்தனர்.

இதுபற்றி முன்கூட்டியே தகவல் அறிந்ததும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாரதிராஜா வீட்டின் முன்பு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். பாரதிராஜாவின் வீட்டில் இருந்து 50 அடி தூரத்திற்கு முன்பே சாலையில் தடுப்புகள் வைத்து போலீசார் தடை ஏற்படுத்தினர்.

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் சுமார் 200 பேர் பாரதிராஜாவின் வீட்டை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். உடனே 'அன்னக்கொடி' திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

பின்னர் அவர்கள் தேனி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

'அன்னக்கொடி' திரைப்படம் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் விதமாகவும், சாதிக்கலவரத்தை தூண்டும் வகையிலும் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் காதலிப்பது போன்றும், கலப்பு திருமணம் செய்வது போன்றும், அடுத்தவர் மனைவியை கூட்டி வருவது போன்றும் காட்சி வருகிறது.

மேலும் 'ஆங்கிலேயர் நாட்டை விட்டு போய்விட்டார்கள், விஜயநகர பேரரசை சேர்ந்த தெலுங்கர்கள் இன்னும் இந்த நாட்டை விட்டு போகவில்லை' என்ற தேசிய ஒருமைப்பாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் காட்சி வருகிறது. எனவே இந்தபடத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பாரதிராஜா வீடு மற்றும் 'அன்னக்கொடி' திரைப்படம் திரையிடப்பட்டு உள்ள திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

உத்தரகாண்ட் வெள்ளத்துக்கு ரூ.10 லட்சம்: நடிகர்கள் சூர்யா – கார்த்தி வழங்கினர்

59c68a10-b954-48f3-8710-c610f2843118_S_secvpfநடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி தியாகராயநகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கில் இன்று நடந்தது.

விழாவில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் பங்கேற்று 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.2.5 லட்சம் பரிசு வழங்கினார்கள். ஏழை மாணவர்களுக்காக தாய் தமிழ் பள்ளிக்கு ரூ.1 லட்சமும் வாழை சமூக சேவை இயக்கத்துக்கு ரூ.2 லட்சம் வழங்கினர்.

விழாவில் சூர்யா பேசியதாவது:-

கடந்த 34 வருடமாக சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. வேறு உதவிகளைவிட கல்விக்கு செய்கின்ற உதவி ஒருவருக்கு காலத்திற்கும் பயன்படும். அகரம் பவுண்டேசன் அடிதட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி வருகிறது.

650-க்கும் அதிகமான மாணவர்களின் கல்லூரி கனவை நனவாக்கி இருக்கிறோம். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உதவிகளை ஏழை குழந்தைகளின் கல்விக்கு வழங்க வேண்டும். உத்தரகாண்ட் வெள்ளத்தில் மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். நமது ராணுவத்தினர் திறமையாக செயல்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

அந்த பேரழிவு 3, 4 ஆண்டுகளுக்கு நாட்டை பின்னோக்கி கொண்டு சென்று விட்டது என்கின்றனர். இதற்காக எங்கள் குடும்பம் சார்பில் ரூ.10 லட்சம் பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.

இவ்வாறு சூர்யா பேசினார்.

சிவகுமார் மகள் பிருந்தா இறைவணக்கம் பாடினார். அகரம் பவுண்டேசன் செயலாளர் ஜெயஸ்ரீ, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பங்கேற்றனர்.

என் அம்மா சரிகா, நான் ஏன் கௌதமியை அம்மான்னு கூப்பிடணும்?: ஸ்ருதி

சென்னை: எனக்கு அம்மா இருக்கிறார். அவர் பெயர் சரிகா. நான் ஏன் கௌதமியை அம்மா என்று அழைக்கணும் என ஸ்ருதி ஹாஸன் கேள்வி எழுப்பியுள்ளார்.

30-shruti-hassan56-300கமல் ஹாஸன், சரிகாவின் மகள்கள் ஸ்ருதி மற்றும் அக்ஷரா. இந்நிலையில் கமல், சரிகா விவாகரத்து பெற்றனர். விவாகரத்திற்கு பிறகு கமல் நடிகை கௌதமியுடன் ஒரே வீட்டில் வாழ்கிறார்.

இந்நிலையில் இது குறித்து ஸ்ருதி கூறுகையில், பிரிந்து செல்ல வேண்டும் என்பது என் பெற்றோரின் சொந்த விஷயம். அதனால் அது குறித்து நான் பேச விரும்பவில்லை. எனக்கு என் பெற்றோரின் சந்தோஷம் தான் முக்கியம்.

அவர்களே சந்தோஷமாக பிரிந்துவிட்டதால் எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை. என் தாய் மற்றும் தந்தையுடன் எனக்கு நல்ல நெருக்கம். இருப்பினும் என் தாயுடன் தான் அதிக நெருக்கம். நாங்கள் தோழிகளுக்கும் மேல் என்றார்.

நீங்கள் கௌதமியை அம்மா என்று அழைப்பீர்களா என்று கேட்டதற்கு, நான் ஏன் அப்படி கூப்பிடணும். எனக்கு ஒரு அம்மா இருக்கிறார். அவர் பெயர் சரிகா. என் தந்தை கௌதமியுடன் இருப்பதால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.

நடிகர் ஆகாமல் இருந்திருந்தால் ‘ஷெஃப்’பாகி இருப்பேன்: தனுஷ்

30-1372582059-dhanush876543-600சென்னை: நான் நடிக்க வராமல் இருந்திருந்தால் சமையல் கலைஞராகி இருப்பேன் என்று தனுஷ் தெரிவித்துள்ளார். இயக்குனர் கஸ்தூரி ராஜா வீட்டில் இருந்து நடிக்க வந்தவர் தனுஷ். அவர் இன்று பெரிய ஹீரோவாகிவிட்டார். தமிழில் பெரிய ஹீரோவாக உள்ளவர்களால் கூட பாலிவுட்டில் பெயர் எடுக்க முடியவில்லை. அப்படி இருக்கையில் அவர் தனது முதல் இந்தி படத்திலேயே பாலிவுட்டை தன்னைப் பற்றி பேச வைத்துவிட்டார்.

அவரது இந்தி படமான ராஞ்ஹனாவின் தமிழ் டப்பிங்கான அம்பிகாபதியும் தமிழ் ரசிகர்களால் வரவேற்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நடிகர் ஆகாவிட்டால் என்னவாகி ஆகியிருப்பேன் என்று தனுஷ் தெரிவித்துள்ளார்

”கண்ணாமூச்சி கண்ணாமூ்ச்சி நீ தேட நான் தேட…!”

30-1372575932-padapesum-amoha1-600அமோகா என தமிழுக்கு வந்து பின்னர் பற்பல பெயர்களுக்கு மாறி, நடிப்பையும் விட்டு கவர்ச்சிக்கும் தாவி, இப்போது குத்தாட்ட நாயகியாக உயர்ந்து நிற்கும் நிஷா கோத்தாரி, பிரியங்கா கோத்தாரி என்ற புதுப் பெயருடன் மறுபடியும் தமிழுக்கு ரீவிசிட் கொடுத்துள்ளார். ஹீரோயினாக தனக்கு பிரகாசம் கிடைக்கவில்லை என்றதுமே டக்கென கவர்ச்சிக்குத் தாவியவர் அமோகா.

முதல் படமான ஜேஜே இவருக்கு நல்ல பெயரைத்தான் பெற்றுக் கொடுத்தது. ஆனாலும் அவரைத் தேடி தொடர்ந்து படங்கள்தான் வரவில்லை.

மீண்டும் வரும் பூர்ணா.. மறுபடியும் பேசப்படுவாரா?

30-1372574533-poorna11-600சென்னை: பூர்ணா நடித்த படங்களை விட அவரைப் பற்றி வந்த கிசுகிசுக்கள்தான் அதிகம் இருக்கும். கவர்ச்சிகரமான அழகு, ஓரளவு நடிப்பு என எல்லாம் இருந்தும் பெரிய அளவில் பார்க்கப்படாதவர் இந்த பூர்ணா. தற்போது படம் பேசும் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.

முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு மூலம் தமிழுக்கு வந்தவர் இந்த கேரளத்து பூர்ணா.

கடைசியாக அவர் தலை காட்டிச் சென்றது வித்தகன், பார்த்திபனுடன். இடையில் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. ஆனால் இப்போது மீண்டும் படம் பேசும் உள்ளிட்ட சில படங்கள் மூலம் மறுபடியும் தரிசனம் தர வருகிறார்.

யூ டியூபை சினிமா நம்பலாமா?


img1130629016_1_1ஃபர்ஸ்ட் காப்பி முடிந்ததும் பிரதியை சாமிக்கு முன் வைத்து கும்பிடுகிறார்களோ இல்லையோ… ட்ரெய்லர் கட் செய்து யூ டியூபில் ஏற்றிவிடுகிறார்கள். அதன் பிறகு ஒரே நாளில் இரண்டு லட்சம் பேர் பார்த்தார்கள், எட்டு லட்சம் பேர் லைக்கினார்கள், பத்து லட்சம் பேர் ஷே‌ரினார்கள் என்று ஒரே புள்ளிவிவர கணக்குகள்.

விஜய்யின் தலைவா படத்தின் ட்ரெய்லரை போட்ட உடனே பத்து லட்சம் பேர் பார்த்தார்களாம். அ‌ஜீத்தின் புதிய பட ட்ரெய்லர் அதை தாண்ட வேண்டும் என அவ‌ரின் ரசிகர்கள் இப்போதே கீ போர்டை தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இது ஒருபுறம் என்றால், பெயர் தெ‌ரியாத ஹீரோக்களின் படங்களுக்கும் யூ டியூப் புள்ளி விவரங்கள்தான் விளம்பரத்துக்கு உதவுகிறது. சில்லுன்னு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா நெடுஞ்சாலை என்ற படத்தை இயக்கியிருக்கிறார். ஆ‌ரி (சட்டுன்னு பார்த்தால் தாடியும் மீசையுமாக கும்கி விக்ரம் பிரபு போலவே இருக்கிறார்) ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லரை இதுவரை அஞ்சு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் யூ டியூபில் பார்த்திருக்கிறார்களாம். படம் ஹிட்டாகும் என்பதற்கு இந்த புள்ளி விவரத்தைதான் தூக்கி முன்னால் போடுகிறார்கள்.

தேர்தல் பிரச்சாரத்துக்கு நடிகையை பார்க்க வரும் கூட்டம் வோட்டு போடும் என்று நம்புவதை போலதான் இதுவும். யூ டியூபில் ட்ரெய்லர் பார்த்தவர்கள் அதே டியூபில் மொத்தப் படத்தையும் பார்க்க ஆசைப்படுவார்களே… இந்த கோணத்தில் ஏன் இன்னும் யோசனை பண்ணலை?

அன்னக்கொடி

e1739c86-c41a-4ca6-b002-f206e76abeda_S_secvpfகதாநாயகன் லட்சுமணன் ஆடு மேய்க்கும் இளைஞன். அதே ஊரில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்பவர் மனோஜின் தந்தை. வட்டிக்கு பணம் வாங்குபவர் பணம் செலுத்தாவிட்டால் அவரது மனைவியை இழுத்துக்கொண்டு போகும் கொடூர மனம் கொண்டவர். இவரது மகனாக வருபவர் பாரதிராஜாவின் மகன் மனோஜ். இவர் லட்சுமணனின் ஆட்டு மந்தையில் உள்ள ஆட்டை திருடிச் சென்று விடுகிறார். இதனால் இவர்களுக்குள் பகை உண்டாகிறது.

கதாநாயகி கார்த்திகாவும் ஆடு மேய்க்கிறார். பக்கத்து ஊரான இவருக்கும், லட்சுமணனுக்கும் இடையே காதல் மலர்கிறது. இந்த காதலுக்கு எமனாக வருகிறார் மனோஜ். வட்டி பணத்தை வசூல் செய்ய கார்த்திகா வீட்டுக்குச் சென்ற மனோஜ் அவரது அழகில் மயங்கி அவரை அடைய நினைக்கிறார்.

இதற்கிடையில் கார்த்திகாவின் அம்மா சாராயம் வியாபாரம் செய்து வருகிறார். ஒரு கட்டத்தில் போலீசார் கார்த்திகாவையும், அவரது அம்மாவையும் கைது செய்து போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் செல்கிறது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மனோஜ், போலீசாருக்கு பணம் கொடுத்து இருவரையும் விடுவித்து வீட்டுக்கு அழைத்து வருகிறார். அப்போது கார்த்திகாவின் காதல் விவகாரத்தை அவரது அம்மாவிடம் போட்டு கொடுக்கிறார். இதனால் லட்சுமணன் மீது கார்த்திகா அம்மா கோபத்தில் இருக்கிறார்.

இந்தநிலையில் லட்சுமணனும், அவரது தந்தையும் கார்த்திகாவை பெண் கேட்க செல்கிறார்கள். அங்கே கார்த்திகாவின் அம்மா, லட்சுமணன் மற்றும் அவரது தந்தை மீது சாணத்தை கரைத்து ஊற்றி அவமானப்படுத்துகிறார். இந்த களேபரத்தின் உச்சகட்டமாக கார்த்திகாவின் அம்மா லட்சுமணனின் அப்பாவை அடிக்க, கோபத்தில் லட்சுமணன் கார்த்திகாவின் அம்மாவை எட்டி உதைக்கிறார்.

இதனால் கோபம் அடைந்த கார்த்திகா அம்மா, மனோஜ் உதவியுடன் போலீசில் புகார் செய்கிறார். அங்கு லட்சுமணனுக்கு 6 மாதம் ஜெயில் தண்டனையும், அவனது தந்தைக்கு 2 நாள் தண்டனையும் கிடைக்கிறது. தண்டனை முடிந்து வெளியே வந்த லட்சுமணனின் தந்தை, மனோஜ் தந்தையிடம் வட்டிக்குப் பணம் வாங்கி தனது மகனை ஜாமீனில் எடுக்கிறார்.

வெளியில் வந்து லட்சுமணன் கார்த்திகாவை கைப்பிடித்தாரா? கார்த்திகாவை அடைய முயன்ற மனோஜ் எண்ணம் நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை.

கதாநாயகனாக லட்சுமணன் அறிமுகமாகியிருக்கிறார். முதல் படமே என்று தெரியாத அளவிற்கு கிராமத்து இளைஞர் வேடத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 'கோ' படத்தில் பார்த்த கார்த்திகாவா இது? என்று கேட்கும் அளவிற்கு பட்டிக்காட்டு பெண் வேடத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

10 வருடங்களுக்குப்பின் பாரதிராஜா தன் மகன் மனோஜை வில்லனாக களம் இறக்கியிருக்கிறார். கார்த்திகா மற்றும் மனோஜியின் நடிப்பு படத்திற்கு பலம்.

ஜீ.வி. பிராகாஷ் இசையில் உருவாகிய பாடல்கள் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையும் சுமார்.

சாலை சகாதேவன் தனது ஒளிப்பதிவில் கிராமத்து அழகை கண்முன் நிறுத்தியிருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாரதிராஜா இயக்கிய படம். உண்மைக் கதையை தற்போது உள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு எடுக்க முயற்சித்திருக்கிறார். இருந்தாலும், அவரது பழைய படங்கள் மாதிரியே செல்கிறது. திரைக்கதையில் தொய்வு.

அன்னக்கொடி மொத்தத்தில் அரைக்கம்பம்.

ஐகோர்ட்டில் சமரச உடன்பாடு: தனுஷ் பட தலைப்புக்கு பிரச்சினை தீர்ந்தது

ccfed2ac-6534-4fa0-9a13-d39f4f86bc68_S_secvpfதனுஷ் இந்தியில் நடித்த ராஞ்சனா படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியாகியுள்ளது.

அம்பிகாபதி பெயரை தனுஷ் படத்துக்கு பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து சிவாஜி நடித்த அம்பிகாபதி படத்தை தயாரித்த ஏ.எல்.எஸ். பட நிறுவனம் சார்பில் வக்கீல் பி.ஆனந்தன் நோட்டீஸ் அனுப்பினார். அதில், ''அம்பிகாபதி படத் தலைப்பை ஏ.என்.பி. நிறுவனத்துக்குத்தான் விற்றோம். வட இந்திய நிறுவனமான ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு விற்க வில்லை. எனவே அம்பிகாபதி தலைப்பை பயன்படுத்த கூடாது'' என்று கூறப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. 27-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பின்னர் விசாரணை நேற்றைக்கு தள்ளி வைக்கப்பட்டது. நேற்று படம் வெளியாகும் தேதி நிர்ணயிக்கப்பட்டதால், நேற்று காலை முதல் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது ஏ.எல்.எஸ். பட நிறுவனத்தினரும், ஈராஸ் இன்டர்நேஷனல் பட நிறுவனத்தினரும் சமரச உடன்பாடு செய்து கொள்வதாக கோர்ட்டில் தெரிவித்தனர்.

ஏ.எல்.எஸ் நிறுவனத்திடம் இருந்து ஈராஸ் இண்டர் நேஷனல் நிறுவனம் அம்பிகாபதி தலைப்பை பயன்படுத்துவதற்கான உரிமையை வாங்கியது. இதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அம்பிகாபதி படத்தலைப்பை பயன்படுத்துவதற்கான தடையும் நீங்கியது. இதனால் குறிப்பிட்ட படி அம்பிகாபதி படம் நேற்று ரிலீஸ் ஆனது.

10 ஆண்டுகள் மட்டுமே கதாநாயகி வாய்ப்பு கிடைக்கும்: டாப்சி

d23e2a23-0126-4364-b86d-b073d3b48d43_S_secvpfஆடுகளம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்சி. இவர் தற்போது லாரன்சுடன் 'கங்கா' படத்திலும், கோபி சந்த்துடன் 'சாகசம்' என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

டாப்சி கூறியதாவது:-

எனக்கு சாகச காட்சிகளில் நடிக்க ஆசை. சாகசம் படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. கிளாமர் இல்லாத சினிமாவை யாராலும் நினைத்து பார்க்க முடியாது. ஆனால் கிளாமர் என்பது அருவறுப்பாக மாறி விடக்கூடாது. கிளாமருடன் நடிப்பும் தெரிந்தால்தான் சினிமாவில் முன்னுக்கு வர முடியும்.

'ஆடுகளம்' படம் எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. அதில் சேலஞ்சிங் ரோலில் நடித்தேன்.

இதுபோன்ற வாய்ப்பு கிடைப்பது அரிதானது. ஆனால் எனக்கு முதல் படத்திலேயே கிடைத்துள்ளது.

சினிமாவில் 10 வருடம் மட்டும்தான் கதாநாயகியாக தாக்குபிடிக்க முடியும். தொடர்ந்து கதாநாயகியாக நடிக்கலாம் என்று யார் கூறினாலும் நம்ப மாட்டேன். 10 வருடங்களுக்கு பிறகு சினிமாவில் வாய்ப்பு வராதபட்சத்தில் நான் நடிகை என்று தெரியாத இடங்களுக்கு சென்று சாதாரண பெண் போல வாழ்க்கையை நடத்துவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கிய ஸ்ரீசாந்த் சினிமாவில் நடிக்கிறார்

a9327fd1-75be-47ae-9ca7-d9cec174cbde_S_secvpfகேரளாவை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சமீபத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டப் புகாரில் சிக்கி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய அவருடன் மேலும் 2 வீரர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்களை தொடர்ந்து நாடு முழுவதும் சூதாட்டத் தரகர்களும் கைது செய்யப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒருவழியாக பல்வேறு தடைகளை தாண்டி ஸ்ரீசாந்த் ஜாமீனில் வெளியே வந்தார். தற்போது கொச்சியில் குடும்பத்தினருடன் பொழுதை கழித்து வரும் ஸ்ரீசாந்த் சினிமாவில் நடிக்க இருக்கிறார்.

ஸ்ரீசாந்த் 2009-ம் ஆண்டிலேயே டைரக்டர் ஆஷிக் அபுவின் அறிமுகப்படமான "டாடி கூல்" படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் அவர் கிரிக்கெட்டில் ஜொலிக்கத் தொடங்கவே சினிமாவை ஒதுக்கினார்.

அதன்பின்னர் இன்னொரு பிரபல மலையாள இயக்குனரின் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் அவர் சூதாட்டப் புகாரில் சிக்கியதால் அந்த படமும் கிடப்பில் போடப்பட்டது.

இந்தநிலையில் "கவுபாய்" படத்தை இயக்கிய டைரக்டர் பி.பாலசந்திர குமார் அடுத்து இயக்க உள்ள "பிக் பிக்சர்" படத்தில் ஸ்ரீசாந்த் நடிக்க இருக்கிறார். தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகும் இந்த படத்தில் ஸ்ரீசாந்த்துடன் பிரகாஷ் ராஜ் மற்றும் பிரபு தேவா ஆகியோரும் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

படப்பிடிப்பை சென்னை, கொச்சி, துபாய் மற்றும் லண்டனில் நடத்த டைரக்டர் முடிவு செய்துள்ளார். ஸ்ரீசாந்தின் பாஸ்போர்ட் போலீசிடம் இருப்பதால் பிற நடிகர், நடிகைகள் சம்பந்தப்பட்ட காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Saturday, 29 June 2013

Join in ACE3.COM for playing exciting Indian Rummy Games

Hi ,

rocks has invited you to join at ACE3.Com. To become a member of ACE3.Com , click the link below or paste it into the address bar of your browser.

http://dev.ace3.com/index.php?option=com_login&view=signup&refer=REFPRO433

I love playing Indian worldwide Rummy at ACE3.Com , the best Indian rummy World Wide Feel the excitement while playing all the games.

Best Wishes,
ACE3.Com Team.
Indian Rummy World Wide.

Please add support@Ace3.com to your address book to ensure delivery of all mails to your inbox.

Copyright © Ace3.com 2013 All Rights Reserved.

Wednesday, 26 June 2013

அமிதாப் பச்சனைப் பொறாமைப்பட வைத்த தனுஷின் ராஞ்சனா

bab30121-5f7c-45ed-a244-5eba2b9b8f61_S_secvpfமும்பை, ஜூன் 26-தனுஷின் முதல் இந்தித் திரைப்படமான ராஞ்சனா சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இதில், தனுசும், சோனம் கபூரும் இணைந்து நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டுதல்களை அளிக்கின்றனர்.
இந்தித் திரையுலகின் மூத்த நடிகரும், சூப்பர் ஸ்டாருமான அமிதாப் பச்சன் ஞாயிற்றுக்கிழமை அன்று சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வென்றது குறித்து நடந்த விழாவில் இந்தப் படத்தைப் பார்வையிட்டுள்ளார்.
இந்தத் திரைப்படத்தை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. இதுபோன்ற சிறந்த திரைப்படங்களைப் பார்க்கும்போது இந்தப் படத்தில் என்னுடைய பங்களிப்பு சிறிய அளவிலாவது இருந்திருக்கலாமே என்று என்னைப் புலம்பவும், பொறாமைப்படவும் வைத்துவிடுகின்றது. இளைய தலைமுறையினர் வெளிப்படுத்தும் அபரிமிதமான திறமையும், கலை நுணுக்கத்திறனும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும் என்று அமிதாப் தனது இணையதளச் செய்தியில் வெளிப்படுத்தியுள்ளார்.
இன்னும் சில திறமையான இயக்குனர்கள், நடிகர்கள் நடித்து வெளிவரவிருக்கும் சில படங்களையும் பார்க்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அமிதாப், இத்தகைய திரைப்படங்களைப் பார்ப்பது தனக்கு சந்தோஷத்தையே அளிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார் பிரகாஷ் ஜாவின் இயக்கத்தில், அமிதாப் நடித்துள்ள சத்யகிரஹா விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது.

இமான் இசையில் பாடிய சிவகார்த்திக்கேயன்

26-sivakarthikeyan23-300வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோவாக நடிக்கும் சிவகார்த்திகேயன் அந்தப் படத்தில் பாடல் ஒன்றை பாடி அசத்தியுள்ளாராம். விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் மெரினா படம் மூலம் ஹீரோவானார். 3, மனம் கொத்திப் பறவை, கேடிபில்லா, கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் என சிவகார்த்திக்கேயன் நடித்த அனைத்து படங்களுமே வெற்றிபெற்றுள்ளன. நடிப்போடு நகைச்சுவைத் திறனும் இருப்பதால் ரசிகர்களுக்கு சிவகார்த்திக்கேயனை பிடித்துப்போனது.
இப்போது கைவசம் சில படங்களை வைத்துள்ளார். அதில் ஒன்று வருத்தப்படாத வாலிபர் சங்கம். இதில் சத்தியராஜ் உடன் இணைந்து நடிக்கிறார். இயக்குநர் ராஜேஸ் இயக்கும் இந்தப் படத்திற்கு இசை இமான். நடிகராக மட்டுமே இருந்த சிவகார்த்திகேயனை பாடகராக அறிமுகம் செய்துள்ளார் இமான். இதனை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்து சிவகார்த்திகேயனும் டுவிட்டியுள்ளார். கமல், ரஜினி, கார்த்திக், விஜய், சிம்பு, தனுஷ், வரிசையில் சிவகார்த்திகேயனும் பாடியுள்ளார். நடிகராக ஏற்றுக் கொண்ட ரசிகர்கள் பாடகராக சிவகார்த்திகேயனை அங்கீகரிப்பார்களாக என்பதை படம் வெளியான பின்னர் தெரிந்து கொள்ளலாம். நகைச்சுவை கலந்த பொழுதுபோக்குப் படமாக உருவாகியுள்ள வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஜூலை மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கை சினிமாவாகிறது

imagesகணேஷ் வெங்கட்ராம் நடித்த பனித்துளி படத்தை இயக்கியவர் நட்டிகுமார். இவர், முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கையை படமாக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவாக இருந்தது. அது இப்போது நினைவாகப்போகிறது என்று கூறுகிறார்.
இந்தியாவின் இரும்பு பெண்மணியாக போற்றப்படும் இந்திராவின் வாழ்கை வரலாற்றை திரைக்கதையாக்கிக் கொண்டிருக்கிறார். இப்படம் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது. அநேகமாக தலைப்பும் 'அயர்ன் லேடி இந்திராகாந்தி' என்று இருக்கலாம். படத்தில் இந்திரா வேடத்தில் நடிக்க பொருத்தமானவராக நான் நினைப்பது ஹாலிவுட் நடிகை சூசன் சரண்டாவைத்தான். காலம் கனியும் போது எல்லாம் நன்றாக நடக்கும் என்கிறார் இயக்குனர் நட்டிகுமார்.

ரூ.1.20 கோடி மோசடி: சசிகலா உறவினரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர் சித்திரை செல்வன் கைது

26-baskaran987-300சென்னை: ரூ.1.20 கோடி மோசடி செய்ததாக சினிமா தயாரிப்பாளர் சித்திரை செல்வனை போலீசார் கைது செய்தனர். சினிமா தயாரிப்பாளர் சித்திரை செல்வன் ரூ. 1.20 கோடி மோசடி செய்ததாக சக தயாரிப்பாளரான பிரகாஷ் என்பவர் சென்னை போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சித்திரை செல்வனை சென்னையில் வைத்து கைது செய்தனர். முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் தோழி சசிகலாவின் உறவினர் பாஸ்கரனை வைத்து தலைவன் என்ற படம் எடுத்தவர் சித்திரை செல்வன்.
பாஸ்கரன் 2 மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையல் சித்திரை செல்வனும் கைது செய்யப்பட்டுள்ளார். இதே போன்று பண மோசடி வழக்குகளில் தான் பவர்ஸ்டார் சீனிவாசனும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமலா பால் சூர்யாவை புடிச்சாச்சு, அடுத்து அஜீத்தா?

26-1372234410-thalaivaa-s-600சென்னை: அமலா பாலின் டெக்னிக் அவருக்கு சூப்பராக வேலை செய்கிறது. அமலா பால் விதார்த்துடன் ஜோடி சேர்ந்து நடித்த மைனா படம் மூலம் கோலிவுட்டில் பிரபலமானார். அடடா பொண்ணு நல்லா நடிக்கிறதே என்று அவருக்கு பலர் வாய்ப்புகள் அளித்தனர். இடையே வாய்ப்புகள் குறையவே அம்மணி தெலுங்கு பட உலகில் கவனம் செலுத்த துவங்கினார். இந்நிலையில் அவர் கோலிவுட்டின் முன்னணி ஹீரோவான விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்துள்ளார்.

அடுத்து, மன்மத லீலையை ரீமேக்குகிறார் ‘தில்லு முல்லு’ பத்ரி!

25-director-badri--300கே பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் நடித்த வெற்றிப் படமான மன்மத லீலையை ரீமேக் செய்யப் போவதாக அறிவித்துள்ளார் தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்த பத்ரி. இன்றைய சாதனை நடிகர் – நடிகைகள் பலருக்கு வாசலாக அமைந்தது மன்மதலீலை. ஜெயபிரதா, ஒய் விஜயா, ராதா ரவி என பலரும் இந்தப் படத்தில்தான் அறிமுகமானார்கள்.
இளம் பெண்களை ஏமாற்றி கற்புடன் விளையாடும் ப்ளேபாய் பாத்திரத்தில் கமல் நடித்திருந்தார். ஹலோ மைடியர் ராங் நம்பர், மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், மன்மதலீலை மயக்குது ஆளை உள்ளிட்ட பல பாடல்கள் எம்எஸ் விஸ்வநாதன் இசையில் ரசிகர்களை கிறங்கடித்தன.
பாலச்சந்தரின் தில்லுமுல்லு படத்தை ரீமேக் செய்து வெற்றி கண்ட பத்ரி, இப்போது மன்மத லீலையையும் இன்றை ட்ரெண்டுக்கு ஏற்றபடி ரீமேக் செய்யப் போகிறாராம்.
இதுகுறித்து பத்ரி கூறுகையில், "ரஜினியின் தில்லுமுல்லு படத்தை இந்த காலத்துக்கு ஏற்ற வகையில் காட்சிகள், வசனங்களை மாற்றி எடுத்து இருந்தேன். இப்படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அடுத்து கமலின் மன்மதலீலை படத்தையும் ரீமேக் செய்ய விருப்பம் உள்ளது. நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர் முடிவானதும் அறிவிக்கப்படும்," என்றார்.

ஈழப் பிரச்சினையில் மாணவர்கள்.. படம் அறப்போர்- சுவிட்சர்லாந்தில் வெளியாகிறது!

25-arappor11-600ஜெனீவா: ஈழப் பிரச்சினையில் மாணவர்கள் முன்னெடுத்த வரலாறு காணாத போராட்டத்தை அறப்போர் என்ற பெயரில் ஆவணப்படமாக aதயாரித்துள்ளனர். இந்தப் படத்தை வரும் சனிக்கிழமை ஜூன் 29-ம் தேதி சுவிட்சர்லாந்தில் வெளியிடுகின்றனர். கடந்த மார்ச் மாதம், ஐ.நா. மன்ற மனித உரிமைகள் அவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க அரசுத் தாக்கல் செய்த கண்துடைப்பு தீர்மானத்தை எதிர்த்தும், தமிழீழப் பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டங்களை நடத்தினர்.
மாணவர்கள் முன்னெடுத்த விதவிதமான போராட்ட வடிவங்கள் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது. போராட்டத்தின் நெருக்கடி காரணமாக, இந்திய மத்திய அரசின் கூட்டணியிலிருந்தே தி.மு.க. வெளியேறியது; ஐ.நா.அவையில் கொண்டு வந்த தீர்மானம் இந்தியாவின் ஒப்புதலோடுதான் கொண்டு வரப்பட்டது என்று அமெரிக்காவை ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கச் செய்தது; தமிழக சட்டப் பேரவையில் தனி ஈழத்துக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேறச் செய்தது என மாணவர் போராட்டம் சாதித்தவை ஏராளம்.
இந்த மாணவர் போராட்டத்தை கருவாகக் கொண்டு, 'அறப்போர்' என்கிற ஆவணப்படம் உருவாகி இருக்கிறது. மூவர் மரண தண்டனைக்கு எதிராக தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த செங்கொடியின் வாழ்வைப் பதிவு செய்த 'இப்படிக்கு தோழர் செங்கொடி' ஆவணப்படத்தை இயக்கிய வெற்றிவேல் சந்திரசேகர், இப்படத்தை இயக்கியிருக்கிறார். கபிலன் சிவபாதம் தயாரித்துள்ளார்.
தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு கோரி நடைபெற்ற மாணவர் போராட்டத்தை, தமிழர் அல்லாத பிற மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் இப்படம் பல்வேறு மொழிகளில் குறிப்பெழுத்துகளுடன் (Sub title) வெளியிடப்படவுள்ளது.
இந்த ஆவணப்படம் வருகின்ற ஜூலை மாதம் சென்னையில் வெளியாகவுள்ள நிலையில், முதல் கட்டமாக வருகின்ற ஜூன் 29ம் நாள் சனிக்கிழமை அன்று மதியம் 2 மணியளவில், சுவிட்சர்லாந்தில் தமிழ் இளையோர் அமைப்பு சார்பில் நடைபெறும் தமிழீழ விடுதலைப் போராட்ட ஈகி சிவக்குமார் நினைவேந்தல் மற்றும் மாணவர் எழுச்சி நாள் நிகழ்வில் வெளியிடப்பட்டு திரையிடப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தின் Sala Aragonite, Via Al Boschetti 10, 6928 Manno என்ற இடத்தில் நடைபெறும் இந்நிகழ்வில், சுவிட்சர்லாந்து வாழ் புலம்பெயர்ந்த தமிழர்கள் பெருந்திரளாக பங்கேற்கவுள்ளனர்.

அஜீத்தை கவர்ந்த அவ்வையார் ஆத்திசூடி: படப்பிடிப்பு ஓய்வில் படிக்கிறார்

fd99cc13-ffad-4b25-8c71-a7746f595150_S_secvpfஅஜீத்தை அவ்வையாரின் ஆத்திசூடி மிகவும் கவர்ந்துள்ளது. படப்பிடிப்பு ஓய்வில் அறம் செய்ய விரும்பு ஆறுவது சினம் என படித்து மனப்பாடம் செய்கிறார்.
முழு ஆத்தி சூடியையும் தனது மொபைலில் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளார். நண்பர்களிடம் பேசும்போதெல்லாம் அதன் வரிகளை மேற்கொள் காட்டுகிறார். ஒவ்வொரு வரிக்கும் தெளிவான விளக்கமும் சொல்கிறார். தனது மகள் அனோஷ்காவையும் ஆத்திசூடியை படிக்க நிர்ப்பந்தக்கிறாராம்.
அஜீத் தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதில் அஜீத் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஆர்யா, டாப்சியும் நடிக்கின்றனர்.

அப்பா கமலுடன் நடிக்க ஆசை- ஸ்ருதிஹாசன் பேட்டி

b0e9aa20-e497-43d0-9fed-7ddf8e39f8e9_S_secvpfஸ்ருதிஹாசன் தெலுங்கில் பிசியாக உள்ளார். இந்திப் படங்களிலும் நடிக்கிறார். ஐதராபாத்தில் ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டி வருமாறு:-
மாடலிங், இசை, சினிமா மூன்றும் எனக்கு பிடித்தவை. என்னைப் பற்றிய எல்லா விஷயகளையும் அப்பா கமல், அம்மா சரிகா, தங்கை அக்ஷரா ஆகியோருடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நான் நடித்த படங்களில் ஓமை பிரண்ட், கப்பார் சிங் தெலுங்கு படங்கள் பிடித்துள்ளன. உணவு வகைகளில் தமிழ்நாடு, கேரளா, உணவுகள் மற்றும் ஐதராபாத் பிரியாணி ரொம்ப பிடிக்கும்.
ஓய்வில் வீட்டில் பீரோவில் உள்ள துணிமணிகளை ஒழுங்குபடுத்துவேன். புத்தகங்களை அடுக்கி வைப்பேன். சினிமா பார்ப்பேன். புதிதாக வந்த புத்தகங்களை படிப்பேன். நான் காதலிப்பது நடிப்பையும் என் குடும்பம் மற்றும் நண்பர்களைத்தான். அடுத்தவர்களிடம் எனக்கு பிடிக்கும் விஷயங்கள் திறமை, உண்மையாக இருப்பது கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது, என் அப்பா கமலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்றும் ஆசை உள்ளது. என்னைப் பற்றி அப்பா பெருமையாக பேசும் அளவுக்கு வாழ்க்கையில் சாதிக்க வேண்டும்.
என்னை வேதனைப்படுத்திய சம்பவங்களாக நான் கருதுவது அப்பா, அம்மா பிரிந்து போனது. அப்பாவுக்கு நேர்ந்த கார் விபத்து, அம்மா மாடியில் இருந்து கீழே விழுந்தது.
எல்லா முடிவுகளையும் நானே எடுக்க வேண்டும் என்று அப்பா அடிக்கடி சொல்வார். சினிமா பற்றி நான் ஏதேனும் பேசினாலும் அவர் ஆர்வம் காட்ட மாட்டார். வீட்டு வாசலோடு சினிமாவை விட்டுவிட்டு வருவார்.
உடம்பை கட்டுகோப்பாக வைத்துக் கொள்வதற்கு நான் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்கிறேன்.
ரசிகர்களுக்கு நான் சொல்லும் வார்த்தைகள் வாழ்க்கையை உங்கள் கையில் எடுத்துக் கொண்டு வாழுங்கள். தவறு செய்தால் தான் எது சரி என்று புரியும். வாழ்க்கை ஒரு முறைதான். இருக்கிற நாட்கள் சந்தோஷமாக வாழுங்கள்.
இவ்வாறு ஸ்ருதிஹாசன் கூறினார்.

லக்ஸ் சோப்பின் புதிய ஜோடி தனுஷ், சோனம் கபூர்

25-1372148446-dhanush-sonam987-600மும்பை: லக்ஸ் சோப்பின் புதிய ஜோடியாக ராஞ்ஹனா ஜோடி தனுஷ், சோனம் கபூர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஜோடி இனி லக்ஸ் சோப் விளம்பரங்களில் வரும். அழகுசாதன சோப்பான லக்ஸ் பெரும்பாலும் நடிகைகளையே தங்கள் விளம்பரங்களில் நடிக்க வைக்கும்.
சில சமயம் நடிகர்களை தேர்வு செய்யும். ஹேமமாலினி, மதுபாலா, கரீனா கபூர், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பிரபல நடிகைகள் லக்ஸ் விளம்பரத்தில் நடித்துள்ளனர். லக்ஸ் பிராண்ட் அம்பாசிடராவதை சில நடிகைகள் பெருமையாக கருதுகின்றனர்.
இந்நிலையில் லக்ஸின் புதிய பிராண்ட் அம்பாசிடர்களாக ராஞ்ஹனா ஜோடி தனுஷ், சோனம் கபூர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மீண்டும் நடிக்க வருகிறார் ஜோதிகா: யாராவது நல்ல ரோல் வச்சிருக்கீங்களா?

25-jothika-surya21-300சென்னை: திருமணத்திற்கு பிறகு கணவன், குழந்தைகள் என்று செட்டிலான ஜோதிகா மீண்டும் நடிக்க வருகிறார். சூர்யாவை திருமணம் செய்த பிறகு ஜோதிகா திரையுலகிற்கு டாடா காட்டிவிட்டு வீட்டில் உட்கார்ந்துவிட்டார். தியா, தேவ் ஆகிய 2 குழந்தைகளின் தாயான அவர் சூர்யாவுக்காக ஒரு விளம்பர படத்தில் அவருடன் ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் திருமணமான பிறகும் சினேகாவுக்கு வாய்ப்புகள் வந்து குவிவது ஜோவுக்கு ஆச்சரியமாக உள்ளதாம். டிவி, பத்திரிக்கைகள் என்று சினேகா, பிரசன்னா ஜோடியாக வர என்னங்க நாமும் இவ்வாறு நடித்திருந்திருக்கலாமே என்று ஜோ சொல்ல இனிமேல் நடித்தால் போச்சு என்று சூர்யா தெரிவித்துள்ளாராம்.
தான் மீண்டும் சினிமாவில் நடிக்க விரும்புவதை ஜோ கூற சூர்யாவும் ஓகே சொல்லிவிட்டாராம். ஹரிதாஸ் சினேகா கதாபாத்திரம், இங்கிலீஷ் விங்கிலீஷ் ஸ்ரீதேவி கதாபாத்திரம் போல் கிடைத்தால் ஜோ நடிக்க ரெடியாம்.

Sunday, 23 June 2013

வடிவேலு நடிக்கவிருந்த கதை, கடைசியில் விஜய்க்குப் போனது! – கரு பழனியப்பன் ப்ளாஷ்பேக்

21-vadivelu-vijay21-300சென்னை: விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் வடிவேலுதான். அப்புறம்தான் அதில் விஜய் வந்தார், என்று ரகசியத்தை உடைத்தார் இயக்குநர் கரு பழனியப்பன். துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதை தொட்டு, பூவெல்லாம் உன் வாசம், மனம் கொத்திப் பறவை உள்ளிட்ட பல வெற்றிப்படங்கள் தந்த இயக்குநர் எழில் இயக்கும் படம் தேசிங்குராஜா.
இதுவரை தான் இயக்கிய படங்களிலேயே மிகப் பிடித்த படம் என்று எழிலே சொல்லும் அளவுக்கு சிறப்பாக வந்துள்ளதாம் இந்தப் படம். இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குநர் எழில் பற்றி அவருடன் பணியாற்றிய இன்னொரு இயக்குநரான கரு.பழனியப்பன் பேசினார். தனது பேச்சில், “எத்தனை வெற்றிகள் வந்தாலும் அலட்டிக் கொள்ளாத மனிதர் எழில். துள்ளாத மனமும் துள்ளும் கதையை பல ஹீரோக்களிடம் சொல்லி கால்ஷீட் கேட்டுக்கொண்டிருந்தோம்.
ஒரு கட்டத்தில் அப்போதைய வடிவேலு வரை இந்தக் கதையில் நடிக்கக் கேட்டுக் கொண்டிருந்தோம். கதையை கேட்ட வடிவேலு, ‘இது ரொம்ப நல்ல கதை. ஆனா இந்த நல்ல கதையில் நான் நடிக்கணுமா. நல்லா யோசிச்சு பாருங்க. ஒரு நல்ல கதைல நான் நடிச்சு வீணடிக்க விரும்பல. 6 மாசம் காத்திருந்து அப்பறம் வாங்க, அப்பவும் உஙளுக்கு இதே மனநிலை இருந்தா நான் நடிச்சு குடுக்குறேன்,’ என்று கூறினார்.
அதன்பிறகு சூப்பர்குட் ஃபிலிம்ஸ் படத்தைத் தயாரிக்க முன்வந்தது. விஜய் கால்ஷீட் தந்தார். இல்லாவிட்டால் வடிவேலுதான் நடித்திருப்பார். வடிவேலு நடித்திருந்தால் இந்த திரைப்படத்தில் விஜய் நடித்திருக்க முடியாது,” என்றார்.
தேசிங்கு ராஜா படத்தில் விமல் நாயகனாகவும், சூரி அவருக்கு தமாஷ் வில்லனாகவும் நடித்துள்ளனர். பிந்து மாதவி, சிங்கம் புலி, ரவி மரியா உள்பட பலர் நடித்துள்ளனர்.

நடிகையர் சம்பளப் பட்டியலில் நயன்தாரா, அனுஷ்கா முதல் இடம்

73aa247d-0078-49a3-9e13-30bfb0b5bffc_S_secvpf
நயன்தாரா, அனுஷ்கா சம்பளம் ரூ.2 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை எந்தவொரு தமிழ், தெலுங்கு நடிகையும் இவ்வளவு தொகை வாங்கியது இல்லை. இருவருக்கும் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. எனவே சம்பளத்தை வரலாறு காணாத அளவு ஏற்றி உள்ளனர்.
நயன்தாரா தெலுங்கில் நடிக்கும் ‘அனாமிகா’ படத்துக்காக இந்த சம்பளம் வழங்கப்படுகிறது. இப்படம் இந்தியில் ஹிட்டான ‘கஹானி’ என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்தியில் வித்யாபாலன் கர்ப்பிணி வேடத்தில் நடித்து இருந்தார். அதே கேரக்டரில் நயன்தாரா நடிக்கிறார். கர்ப்பிணியாக நடிப்பதற்காகவே ரூ.2 கோடியை அள்ளி கொடுத்துள்ளனர்.
தமிழில் நயன்தாரா அஜீத் ஜோடியாக பெயரிடப்படாத படமொன்றிலும் ஆர்யாவுடன் ‘ராஜாராணி’ படத்திலும் மற்றும் உதயநிதியுடன் ‘இது கதிர்வேலன் காதலி’ படத்திலும் நடிக்கிறார். இப்படங்களுக்கு இரண்டு கோடிக்கு குறைவாகவே சம்பளம் பேசி உள்ளார். தெலுங்கில் சம்பளம் ரூ.2 கோடியானதால் அடுத்து ஒப்பந்தமாகும் புதுப் படங்களுக்கு ரூ.2 கோடி கேட்க முடிவு செய்துள்ளாராம்.
இதுபோல் அனுஷ்கா ‘ருத்ரமாதேவி’ என்ற சரித்திர படத்தில் நடிக்க ரூ.2 கோடி பெற்றுள்ளார். இதில் அனுஷ்கா மகாராணி வேடத்தில் வருகிறார். இதற்காக வாள் சண்டையும் கற்றார்.

தமிழ், தெலுங்கு ரசிகர்கள் இரு நடிகைகளையும் கனவு கன்னியாக வைத்து கொண்டாடுவதை சம்பள உயர்வு வெளிப்படுத்தி உள்ளது என்கின்றனர்.

இவற்றில் எந்தப் படத்தைதான் பண்ணுவார் சூப்பர் ஸ்டார்?

21-rajini8765-300
கடந்த சில தினங்களாக ரஜினி கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிப்பார் என்றும், இல்லையில்லை ஷங்கர் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்றும் செய்திகள் பரபரத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இரண்டையுமே ரஜினி தரப்பிலோ சம்பந்தப்பட்ட இயக்குநர்கள் தரப்பிலோ ஒருவரும் உறுதிப்படுத்தவில்லை. சில தினங்களுக்கு முன் ஒரு வார இதழ், கோச்சடையான் படம் முடிய இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவைப்படுவதால், அதற்கு முன் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி ஒரு படம் நடிக்கப் போவதாகவும், இரண்டு மாதங்களில் இந்தப் படம் முடிந்து விடும் என்றும், அந்தப் படம் எடுத்து முடிக்கும் வரை விஷயத்தை ரகசியமாக வைத்திருக்குமாறு ரஜினி கேட்டுக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது.

இந்த செய்தி தொடர்ந்து ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தபோதே, முன்னணி ஆங்கில நாளிதள் ஒன்று தன் பங்குக்கு இன்னொரு பரபரப்பைக் கொளுத்திப் போட்டது. இயக்குநர் ஷங்கர் ரஜினியைச் சந்தித்து ஒரு ஒன்லைன் சொன்னதாகவும், அது பிடித்துப் போய், அடுத்த படமாகவே இதைச் செய்யலாம் என ரஜினி சொன்னதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தது.
இந்த இரண்டு செய்திகளுமே உண்மையாக வாய்ப்பிருக்கிறதா? ரஜினி தரப்பில் விசாரித்தால், 'அவரையும் அவர் படங்களையும் பற்றி தினமும் அவரவர் இஷ்டத்துக்கு எழுதுகிறார்கள். ஒருவரும் குறைந்தபட்சம் விசாரிக்கக் கூட முயற்சிப்பதில்லை.
இந்த பரபரப்பு எப்படி கிளம்பியதோ அப்படியே மறந்தும்போகும். அதனால்தான் அதைப் பற்றி நாங்கள் அலட்டிக் கொள்வதில்லை. புதிய செய்தி ஏதாவது இருந்தால் அதை அதிகாரப்பூர்வமாக ரஜினி சாரே தருவார்," என்கிறார்கள்.

ஸ்ருதிஹாசன் படத்துக்கு எதிர்ப்பு

images
ஸ்ருதிஹாசன் ரவி தேஜா ஜோடியாக நடித்த பலுபு படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

ஜுன் 28 ஆம் தேதி ரவி தேஜா, ஸ்ருதிஹாசன், அஞ்சலி நடித்திருக்கும் தெலுங்குப் படம் பலுபு வெளியாகிறது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்றிருக்கும் பிராமணர்களுக்கு எதிரான வசனங்களை நீக்க வேண்டும் என பிராமண சேவா என்ற அமைப்பு மனு அளித்திருக்கிறது.
சென்ற வருடம் வெளியான தெலுங்குப் படமொன்றில் பிராமணர்களை தவறாக சித்தாpத்ததாக கூறி இந்த அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தை கிண்டல் செய்யும் விதமாக பலுபு வில் வசனங்கள் வைத்திருக்கிறார்களாம். படத்தின் ட்ரெய்லரில் வரும் அந்த சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டும் என ஆந்திர அரசுக்கும், சென்சாருக்கும் மனு அளித்திருக்கிறார்கள்.
பிராமண அமைப்பின் இந்த திடீர் எதிர்ப்பு காரணமாக பலுபுக்கு இலவச விளம்பரம் கிடைத்திருக்கிறது.

ஸ்ரீதேவியுடன் நடனமாடுகிறார் பிரபுதேவா

prabhu-sri
இன்டர்நேஷனல் இந்தியன் ஃபிலிம் அகாடமி என்ற பெயரில் இந்திப் படங்களுக்கு மட்டும் விருதளிக்கும் கூத்து பதிமூன்று வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. இந்திய சினிமா என்று பெயர் வைத்து இந்திப் படங்களை மட்டும் கணக்கில் எடுப்பது நியாயம் இல்லை என அந்த விழாவிலேயே பேசியிருக்கிறார் மம்முட்டி. ஆனால் அவர்களுக்கு இன்னும் சொரணை வந்தபாடில்லை.

14 வது விருது வழங்கும் விழா ஜுலை 4 முதல் 6 ஆம் தேதிவரை நடக்கிறது. வழக்கம் போல பிரபல நட்சத்திரங்கள் மேடையில் நடனமாடுகிறார்கள். இதுவரை இந்த விருது விழாவில் நடனமாடாத மாதுரி தீட்சித், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனுடன் தானும் திறமை காட்டயிருக்கிறார்.
அதேபோல் ஸ்ரீதேவி. இளமை கழிந்த பின்னும் கிளாமர் குறையாதவர் பிரபுதேவாவுடன் சேர்ந்து மேடையில் நடனமாடுகிறார். ஸ்ரீதேவி இந்த விருது விழாவில் நடனமாடுவது முதல்முறையாம்.

கமல் செய்தஅதிரடி மாற்றம்

NT_130621053717000000
"விஸ்வரூபம்-2 படத்தின், இறுதிக்கட்ட படப்பிடிப்பை, சென்னையில் நடத்தி வருகிறார் கமல். சேகர் கபூர், பூஜா குமார், ஆண்ட்ரியா என, முதல் பாகத்தில் நடித்தவர்களே, இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகின்றனர். ஆனால், தயாரிப்பு பொறுப்பை மட்டும், தன்னிடமிருந்து, வேறு ஒருவரிடம் விற்று விட்டார். மேலும், முதல் பாகத்துக்கு, ஒளிப்பதிவு செய்த சானு வர்க்கீசை நீக்கி விட்டு, இப்போது ஷாம்தத் சைனுதீன் என்பவரை நியமித்துள்ளார்.

அதே போல், "விஸ்வரூபம் படத்துக்கு மூன்று பேர் இணைந்து இசையமைத்தனர். ஆனால், இப்போது இரண்டாம் பாகத்துக்கு, ஜிப்ரானை ஒப்பந்தம் செய்துள்ளார்."வாகை சூடவா படத்தில் அறிமுகமான ஜிப்ரான், "வத்திக்குச்சி, குட்டிப்புலி படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

நாளைய தீர்ப்பு முதல் தலைவா வரை… – விஜய்யின் 20 ஆண்டு சினிமா!

22-1371904685-thalaivaa87600
சென்னை: 50-க்கும் மேற்பட்ட படங்கள், பல அசத்தலான வெற்றிகள், ஏகப்பட்ட ரசிகர்கள், அரசியலிலும் ஓரளவு செல்வாக்கு என வலம் வரும் விஜய்க்கு இன்று பிறந்த நாள்.

சினிமாவில் அவர் நடிக்க ஆரம்பித்து 20 ஆண்டுகள் ஆன நிலையில் வரும் பிறந்த நாள் என்பதால் கூடுதல் முக்கியத்துவம்.
இந்த நாளில் வழக்கமாக அவர் காலையிலிருந்து மாலை வரை நலத்திட்ட உதவி, ரசிகர்கள் கொண்டாட்டம் என பிஸியாக இருப்பார். இந்த முறை அதெல்லாம் கட்.
அதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லப்படுகின்றன. விஜய் மீதும் அவர் படங்கள் மீதும் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், இன்று சினிமாவில் அவர் அடைந்திருக்கும் உயரம் சாதாரணமாகக் கிடைத்துவிடவில்லை.

சூர்யாவின் சிங்கம் 2- ஜூலை 5-ம் தேதி உலகமெங்கும் ரிலீஸ்!

22-singam-2-1-300
சூர்யாவின் சிங்கம் 2- ஜூலை 5-ம் தேதி உலகமெங்கும் ரிலீஸ்!

சென்னை: சூர்யா நடிப்பில் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் சிங்கம் 2 படம் வரும் ஜூலை 5-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
ஹரி இயக்கத்தில் வெளியான சிங்கம் படத்தின் இரண்டாம் பாகம் சிங்கம் 2 என்ற பெயரிலேயே உருவாகி வந்தது.
இதில் சூர்யா – அனுஷ்கா ஜோடியுடன், ஹன்சிகா, விவேக், சந்தானம் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஹரி இயக்கியுள்ளார். இதன் படபிடிப்பு தூத்துக்குடியில் தொடங்கி தென் ஆப்ரிக்கா வரை நடந்தது. சமீபத்தில் பாடல்கள் வெளியிடப்பட்டன. படம் ஜூலை 5-ந்தேதி ரிலீசாகிறது.
சிங்கம் படம் உள்ளூர் அரசியல் வாதிகள் மற்றும் ரவுடிகள் பற்றி சொன்னது. அதன் இறுதியில் சர்வதேச டான்கள் பற்றிய ஒரு குறிப்போடு முடிக்கப்பட்டிருந்தது. சிங்கம் 2 படத்தில் சர்வதேச தாதாக்களுடன் சூர்யா மோதுவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
ஹன்சிகா பள்ளி மாணவியாக வருகிறார் (தாங்குமா?). இப்படம் தமிழகத்திலும் கேரளாவிலும் தமிழிலேயே வெளியாகிறது. யாமுடு 2 என்ற பெயரில், தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.
பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது அனைத்து மொழிகளிலும், வெளிநாடுகளிலும்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரியாணி விருந்தளித்து பிறந்த நாள் கொண்டாடிய விஜய்!

22-vijay-birthday32-300
சென்னை: குழந்தைகளுக்கு இலவச தங்க மோதிரம், ஏழைகளுக்கு ஏகப்பட்ட இலவசப் பொருள்கள், அன்னதானம் என வழங்கி தனது பிறந்த நாளைக் கொண்டாடி வந்த விஜய், இந்த முறை அமைதியாக ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரியாணி விருந்து அளித்து பிறந்த நாளை 'அடக்கமாகக்' கொண்டாடினார்.

இன்று விஜய்யின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
அரசியல் நெருக்கடிகள் காரணமாக அவர் இந்த முறை விமரிசையாக பிறந்த நாள் கொண்டாடவில்லை என்று கூறப்படுகிறது.
இன்று காலையிலேயே தன் பெற்றோரைச் சந்தித்து ஆசி பெற்ற விஜய், பின்னர் ஜில்லா படப்பிடிப்புக்குக் கிளம்பிப் போய்விட்ட விஜய், அங்கு படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடினார். அவருக்காக படக்குழுவினர் கேக் வரவழைத்திருந்தனர்.
கேக் வெட்டிய பிறகு, அனைவருக்கும் தன் கையாலேயே பிரியாணி பரிமாறினார் விஜய்.

அம்பிகாபதியுடன் போட்டியிட தயாராகும் அன்னக்கொடி!

தனுஷின் அம்பிகாபதி படத்துடன் போட்டி போட பாரதிராஜாவின் அன்னக்கொடி படம் தயாராகி வருகிறது. அம்பிகாபதி படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

NT_130622165352000000
இந்த படம் வரும் 28ம் தேதி ரிலீஸ் ஆகவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல புதுமுகம் லக்ஷ்மண் நாராயண், கார்த்திகா நடித்துள்ள பாரதிராஜாவின் அன்னக்கொடிக்கும் யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த படமும் வரும் 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அம்பிகாபதியின் இந்திப்பதிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தமிழ் பதிப்பை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இதேபோல பாரதிராஜாவின் அன்னக்கொடியும் அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கிறது. இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகி போட்டியிடவுள்ளது.


ஆர்யா, நயன்தாரா – திரையை தாண்டிய உறவு

img1130622034_1_1
ஆர்யா, நயன்தாரா நடிக்கும் ராஜா ராணி படத்தை அட்லீ இயக்குகிறார். படத்தில் ஆர்யா, நயன்தாரா கணவன், மனைவியாக வருகிறார்கள். அவர்களுக்கு திருமணம் நடப்பது போல் காட்சி எடுக்கப்பட்ட போது அதனை நிஜத் திருமணம் போல் விளம்பரப்படுத்தி படத்துக்கு விளம்பரம் தேடிக் கொண்டார் அட்லீ. அடச் சீ என பலரையும் முகம் சுளிக்க வைத்தது இந்த விளம்பர யுக்தி.

திருமணத்துக்குப் பின் ஜோடியை மாற்றிக் கொள்ளும் விஷயத்தை ராஜா ராணியில் அட்லீ எடுத்துக் கொண்டதாக சிலர் கிசுகிசு கிளப்பிவிட, படத்தைப் பற்றி அட்லீக்கு சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம்.
இது முழுக்க ஒரு ஜனரஞ்சகமான குடும்பப் படம். திருமணத்துக்கு பிந்தைய இனிமையான காலகட்டத்தை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன் என படத்தின் அவுட் லைனை கசியவிட்டிருக்கிறார். ஆனாலும்…

Friday, 21 June 2013

Are Mermaids Real? 'Mermaids: The New Evidence' Sparks Age-Old Question With New Footage

Are mermaids real? There's no proof they are, of course, but there's plenty of speculation. Animal Planet kicked off its Monsters Week with a 2.0 episode of the hit mockumentary. Mother Nature Network sat down with "Mermaids" creator, writer and executive producer Charlie Foley to find out whether mermaids could be real and what they might look like.

Foley began by explaining why mermaids enrapture many humans: "I suppose the human psyche is fascinated by mermaids because they're an idealized version of ourselves. The idea of a humanoid creature that lives in the ocean and can breathe underwater. Mermaids belong to a world we know and a world from which we come, but which is now alien to us: That's the world of the oceans, and so we identify with them even as they occupy a place of mystery for us."

Foley said he believes humans are also enchanted with mermaids because they represent the evolutionary past -- where humans might have came from originally. "They are a reflection not only of our psyche but our evolutionary selves," he told the site, "a direction we might have gone, and a direction, if you believe the legends and our conjecture in the film, that one branch of our family tree may very well have gone."

The mythical creatures have been depicted in art and mythology for thousands of years, and Foley said he believes that is the case because they were actually seen by our ancestors. "The most frequent explanation is that of sun-strained sailors at sea too long who mistook manatees and dugongs for mermaids. But I think you'd have had to have had a lot of grog before you could mistake a manatee for a mermaid."

The National Oceanic And Atmospheric Administration issued an official statement after "Mermaids: The Body Found" premiered, saying: "No evidence of aquatic humanoids has ever been found. Why, then, do they occupy the collective unconscious of nearly all seafaring peoples? That's a question best left to historians, philosophers, and anthropologists." 

During "Mermaids: The New Evidence," footage that supposedly showed a mermaid leaping off a rock and into the water was revealed. Take a look at the supposed new piece of evidence below:

Thursday, 20 June 2013

21 வயது இளம்பெண்ணுக்கு 11 குழந்தைகள்!

FILE
பாலஸ்தீனத்தில் 21 வயதாகும் ஒரு பெண்ணுக்கு, திருமணமாகி 7 வருடங்களில் 11 குழந்தைகள் பிறந்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்தவர் ராத் அல் பாதாஷ். தற்போது 25 வயதாகும் இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு 14 வயது பெண் ஒருவரோடு திருமணம் நடந்தது. தற்போது இவரது மனைவிக்கு வயது 21.

இந்த தம்பதியரின் 7 ஆண்டு திருமண வாழ்க்கையில் இவர்களுக்கு இதுவரை 11இதுவரை மூன்று முறை கர்ப்பமாகியிருக்கும் இந்த இளம் பெண், ஒரு பிரசவத்தில் ஆண் இரட்டையர்களை பெற்றெடுத்தார். இரண்டாவது முறை நான்கு பெண் குழந்தைகளையும், மூன்றாவது முறை ஐந்து பெண் குழந்தைகளையும் ஓரே பிரசவத்தில் பெற்றெடுத்துள்ளார்.

ரவுக் அல்ப்பதாஸ் அரசு ஊழியராக உள்ளார். 11 குழந்தைகளை வளர்ப்பதற்கு போதிய பணம் இல்லாமல் தவிக்கிறார்கள். 11 குழந்தைகள் இருப்பதால் அவர்களுக்கு அரசு உதவி தொகை வழங்கி வருகிறது. ஆனாலும் உணவுக்கும், மற்ற தேவைகளுக்கும் இது போதவில்லை என்று ரவுக் அல்ப்பதாஸ் கூறினார்.

இதுகுறித்து 11 குழந்தைகளின் தாயான 21 வயது இளம்பெண் கூறுகையில், எனது 9 மகள்கள் மற்றும் 2 மகன்களால் எனக்கு அதிக மகிழ்ச்சியும், சந்தோஷமும் கிடைக்கிறது. ஆனால், எனது கணவர் இவர்களை சரியாக கவனித்துக்கொள்ள போதுமான பணம் இல்லாமல் கஷ்டப்படுவது வருத்தமளிக்கிறது எனத் தெரிவித்தார்

KADAL KANNI ( Real Mermaid )


சமுத்திரகனியுடன் இணைகிறார் ஜீவா!

imagesமுகமூடி, நீதானே என் பொன்வசந்தம் படங்களின் தோல்வியில் இருந்து மீள்வதற்காக வெற்றிப்படங்களை கொடுக்கும் இயக்குனர்களை நாடி வருகிறார் ஜீவா. தற்போது யான், என்றென்றும் புன்னகை என இரண்டு படங்களில் நடித்து வந்தாலும், இதே வேகத்தில் மேல்தட்டு இயக்குனர்களின் படங்களிலும் கமிட்டாகி விட வேண்டும் என்று நினைக்கிறார்.
இப்படி அவர் தீவிரமாக கதை கேட்டு வந்த நேரம்தான், பகலவன் கதையை சீமான் சொன்னார். ஆனால் பிடிக்கவில்லை என்று தவிர்த்து விட்டார் ஜீவா. அதையடுத்து நாடோடிகள், போராளிகள் படத்தை இயக்கிய சமுத்திரகனியை நாடியுள்ளார். தற்போது ஜெயம்ரவி இரண்டு வேடங்களில் நடிக்கும் நிமர்ந்து நில் படத்தை இயக்கும் சமுத்திரகனி, பெரிய ஹிட் கொடுக்கவில்லை என்றாலும், மீடியம் ரேஞ்ச் படத்தையாவது கொடுத்து காப்பாற்றி விடுவார் என்பதால், அவரிடம் தன்னை வைத்து ஒரு படம் பண்ணுமாறு கேட்டுக்கொண்டுள்ளாராம்.
அதற்கு, நிமிர்ந்து நில் பட வேலைகள் சென்று கொண்டிருக்கிறது. இப்படம் திரைக்கு வந்ததும் நாம் இணைவது பற்றி யோசிப்போம் என்று கூறியுள்ளாராம் சமுத்திரகனி. அவரது வார்த்தையை நம்பி இப்போது வேறு புதிய படங்களில் கமிட்டாகாமல் இருக்கிறார் ஜீவா.

தீயில் கருகியது மணிரத்தினத்தின் சினிமா குடோன்

19-manirathanam-300சென்னை: இயக்குநர் மணிரத்தின் திரைப்படப் பொருட்கள் தயாரிப்புக் கூடம் தீவிபத்தில் சிக்கிய சேதமடைந்தது. இந்த கிட்டங்கியானது தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவில் தீவிபத்து ஏற்பட்டது. மின்சாரக் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து பல மணி நேரம் போராடிய தீயை அணைத்தனர். இருப்பினும் கிட்டங்கி முழுவதுமாக எரிந்து போய் விட்டது.

பி‌ரின்ஸுடன் ஜோடி சேரும் குயின்

img1130619030_1_1மகேஷ்பாபுவை ஆந்திராவில் பி‌ரின்ஸ் என்றுதான் அழைக்கிறார்கள். அவருடன் ஜோடி சேர்கிறவர்கள் – யாராக இருந்தாலும் குயின். இன்னும் கொஞ்ச நாளைக்கு தமன்னாதான் அந்த குயின் குஷன் சீட்டில் அமரப் போகிறார்.
தமன்னாவின் லேட்டஸ்ட் தடக்கா பெ‌ரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை. தெலுங்கில் புதிய படங்களும் இல்லை. ஒரே ஜாக்பாட் சிறுத்தை சிவாவின் படத்தில் அ‌‌ஜீத் ஜோடியாக நடிப்பது. இந்நிலையில் மகேஷ்பாபுவின் புதிய படத்தில் தமன்னாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
மகேஷ்பாபுவை வைத்து தூக்குடு படத்தை இயக்கிய சீனு வைட்லா இந்த புதிய படத்தை இயக்குகிறார். Aagadu என பெயர் வைத்திருக்கிறார்கள். தூக்குடு தெலுங்குப்பட ச‌ரித்திரத்தில் பம்பர்ஹிட். ஆகவே தமன்னா இப்போது மகிழ்ச்சியின் கடலில் குளித்துக் கொண்டிருக்கிறார்.

ஜெயம் ரவிக்கு ஜோடியானார் நயன்தாரா!

19-jayam-ravi-nayan300நயன்தாரா மீதான கோலிவுட் மோகம் இப்போதைக்கு குறைவதாக இல்லை போலிருக்கிறது. அடுத்தடுத்து புளியங்கொம்புகளாக அம்மணியைத் தேடிப் போகின்றன. இந்த ஆண்டு மட்டும் உதயநிதி ஸ்டாலின், அஜீத், ஆர்யா ஆகியோர் ஜோடியாக நடித்துவருகிறார் நயன்தாரா. மேலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் அனாமிகா என்ற தமிழ் – தெலுங்கு இருமொழிப் படத்திலும் நடித்து வருகிறார்.
இப்போது தமிழில் அடுத்த பெரிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் அவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாகிறார். படத்தை இயக்கவிருப்பவர் ஜெயம் ராஜா. தில்லாலங்கிடிக்குப் பிறகு ராஜா – ரவி இணையும் இந்தப் படத்தை கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கெனவே நிமிர்ந்து நில் படத்தில் ரவியின் ஜோடியாக நயன்தாராதான் ஒப்பந்தமானார்.
ஆனால் சில காரணங்களால் அவருக்குப் பதில் அமலா பால் ஒப்பந்தமானார். இப்போது மீண்டும் இருவரும் இணைகிறார்கள். ஜெயம் ரவி – நயன்தாரா இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை. படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

தமிழ் நடிகர்கள் திறமைசாலிகள் -ஹன்சிகா

118c89e8-5e13-4bbf-aabf-b51a98e2926c_S_secvpfநடிகை ஹன்சிகா தமிழில் முன்னணி நடிகையாகியுள்ளார். பெரிய ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்துள்ளார். அவர் நடித்த "தீயா வேலை செய்யணும் குமாரு" படம் ரிலீசாகி ஒடிக் கொண்டு இருக்கிறது. அடுத்து சூர்யாவுடன் நடித்த சிங்கம்-2 படம் ரிலீசாக உள்ளது.
தமிழ் நடிகர்கள் பற்றி ஹன்சிகா கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறிய தாவது:-
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய நடிகர்கள் திறமை சாலிகளாக உள்ளனர். பழகுவதற்கும் இனிமையானவர்கள். ஒவ்வொரு வரும் அவர்களுடைய சொந்த ஸ்டைலில் நடிக்கின்றனர். தனித் தனி திறமையும் காட்டுகிறார்கள். விஜய் கடினமாக உழைக்க கூடியவர். சூர்யா சிங்கம் போன்றவர், ஜெயம் ரவி துறுதுறு வென இருப்பார். சிம்பு ஒரு வாலு, ஆர்யா ஜாலியானவர். சந்தானத்தை பார்த்தாலே சிரிப்பு வரும்.

சந்திரமுகி 2-ம் பாகத்தில் ரஜினி நடிப்பாரா?-மலையாளத்தில் மோகன்லால் நடிக்கிறார்

57b2fe6d-62a2-4b00-bdf0-31f9579929fd_S_secvpfதமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் தயாராகி வெற்றிகரமாக ஓடிய படம் சந்திரமுகி.
இப்படம் முதலில் மணி சித்திரதாழு என்ற பெயரில் 1993-ல் ரீலிசானது. மோகன்லால், சுரேஷ்கோபி, ஷோபனா நடித்து இருந்தனர். பின்னர் இதை கன்னடத்தில் ஆப்தமித்ரா என்ற பெயரில் டைரக்டர் பி.வாசு ரீமேக் செய்தார். விஷ்ணு வர்த்தன், சவுந்தர்யா நடித்தனர்.
அதன் பிறகு இப்படம் தமிழில் சந்திரமுகி என்ற பெயரில் தயாரானது. பி.வாசுவே இயக்கினார். ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா நடித்தனர். தமிழகம் முழுவதும் இந்த படம் மெகா ஹிட்டானது. வசூலிலும் சாதனை படைத்தது.
இந்த நிலையில் இதன் இரண்டாம் பாகம் மலையாளத்தில் மீண்டும் தயாராகிறது. இதற்கு கீதாஞ்சலி என பெயரிட்டுள்ளனர். மோகன் லால், ஷோபனா முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.
தமிழிலும் சந்திரமுகி 2-ம் பாகத்தை எடுக்கவும் ரஜினியை அதில் நடிக்க வைக்கவும் முயற்சிகள் நடக்கின்றன.

ஜல் அகர்வாலுக்கு இன்று 28வது பிறந்தநாள் காஜல் அகர்வாலுக்கு இன்று 28வது பிறந்தநாள்

19-1371627669-kajal-agr--600சென்னை: காஜல் அகர்வால் இன்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பழனி படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் காஜல். அவர் மோதி விளையாடு, நான் மகான் அல்ல, மாற்றான் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு வெற்றி நாயகி என்ற பெயரை வாங்கிக் கொடுத்த படம் துப்பாக்கி தான். துப்பாக்கியின் வெற்றிக்கு பிறகு காஜலுக்கு தமிழ் திரையுலகில் மவுசு கூடிவிட்டது.

Tuesday, 18 June 2013

என்னுடன் மட்டும்தான் ஜோடியா நடிக்கணும் – தனுஷுக்கு சோனம் போட்ட கண்டிஷன்!

Raanjhanaa_18613_m1சென்னை: இனி நடிக்கும் இந்திப் படங்களிலும் தனுஷ் தன்னுடன்தான் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டுள்ளார் சோனம் கபூர்.
தனுஷ் நடிக்கும் முதல் இந்திப் படம் ராஞ்ஜ்ஹனா. ஆனந்த் ராய் இயக்கியுள்ள இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருப்பவர் சோனம் கபூர்.
இருவருக்கும் ஜோடிப் பொருத்தம் அபாரமாக இருப்பதாக மீடியாக்கள் கொளுத்திப் போட்டுள்ளன. ஏற்கெனவே காதலில் சொதப்பி மன வருத்தத்தில் இருந்த சோனம், இந்தப் படத்தில் தனுஷுக்கு மிக நெருக்கமாகிவிட்டாராம். இதை தனுஷும் கூட மறுக்கவில்லை.
இந்த நிலையில் இன்று ராஞ்ஜஹனா படத்தின் தமிழ் டப்பிங்கான அம்பிகாபதி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
இதில் படத்தின் நாயகி சோனம் கபூர் கலந்து கொண்டார். வட இந்தியப் பெண்ணான அவர் தமிழ் பெண் போல புடவை, ரவிக்கை, தலை நிறைய மல்லிகைப்பூ அணிந்து வந்திருந்தார் (அந்தப் புடவை அடிக்கடி சொன்ன பேச்சைக் கேட்காமல் இடுப்பைவிட்டு நழுவப் பார்க்க, அதை சோனம் சமாளித்த அழகுக்காகவே அரங்கை விட்டு வெளியேறாமல் கடைசி வரை பலர் நின்றது தனி கதை! ). தனுஷ் பட்டு வேட்டி சட்டையில் மாப்பிள்ளை கெட்டப்பில் வந்திருந்தார்.
இருவரும் ஜோடியாக நின்று போஸ் கொடுத்துவிட்டு, பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்க பதில் சொல்ல ஆரம்பித்தனர்.
அப்போது ஒரு நிருபர், "பாலிவுட்டில் அழகழகான ஹீரோயின்கள் நிறைய இருக்கிறார்கள். இப்போது சோனம் கபூருடன் ஜோடி போட்டுவிட்டீர்கள். நீங்கள் அடுத்து ஜோடி சேர விரும்பும் அழகிய நாயகி யார்?" என்றார்.
உடனே தனுஷ் அதை பக்கத்திலிருந்த சோனம் கபூருக்கு மொழி பெயர்த்துச் சொன்னார்.
உடனே, தனுஷிடம், அடுத்தடுத்த படங்களிலும் நான் மட்டுமே உங்களுக்கு ஜோடியாக நடிக்கவேண்டும் என்றார்.
அதை அப்படியே நிருபருக்கும் பதிலாகத் தந்தார் தனுஷ். "அடுத்தடுத்த படங்களிலும் அவங்கதான் எனக்கு ஜோடியா நடிக்க விரும்பறாங்களாம்… அவங்கதான் இப்படி சொல்றாங்க.. இது கெமிஸ்ட்ரி… அது இதுன்னு என்ன வேணா நினைச்சுக்கங்க. இந்த பீல்டுல இருந்தா இதையெல்லாம் பேஸ் பண்ணித்தான் ஆகணும்… என்னைப் பொருத்த வரை கதைதான் முக்கியம். நல்ல கதை கிடைச்சா போதும். ஹீரோயின் யாருன்னு அப்புறம் பார்த்துக்கலாம்," என்றார்.

ஜெய்ஹிந்த் 2 – அர்ஜுன் செய்த மாற்றம்


img1130618042_1_1தமிழில் பார்ட் 2 எடுப்பது அதிகரித்திருக்கிறது. சிங்கம் 2, விஸ்வரூபம் 2 வுக்குப் பிறகு இப்போது ஜெய்ஹிந்த் 2. இந்த இரண்டாம் பாகத்தை அறிவித்து படப்பிடிப்பையும் அர்ஜுன் தொடங்கிவிட்டார்.
பார்ட் 2 என பெயரிட்டாலும் ஜெய்ஹிந்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் கதைரீதியாக மட்டுமின்றி கதாபாத்திர ரீதியாகவும் எந்தத் தொடர்பும் இல்லையாம். அனைத்தும் புத்தம் புதுசு. முதல் பாகத்தில் அர்ஜுன் ஜோடி ரஞ்சிதா. இப்போது ரஞ்சிதாவை போட முடியுமா? சுர்வீனை நாயகியாக்கியிருக்கிறார்.
அதேபோல் முதல் பாகத்தில் காமெடி ஏரியாவை கவனித்தவர் கவுண்டமணி. அவரின் பகல்தூக்க காமெடி இன்றும் பிரபலம். கவுண்டமணியின் மார்க்கெட் ஒரேயடியாக சாய்ந்துவிட்டதால் அவருக்குப் பதில் பிரம்மானந்தத்தை ஒப்பந்தம் செய்திருக்கிறார். பிரம்மானந்தம் என்றால் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளும் கவராகும் என்பதால் இந்த ஏற்பாடு.

மரியானுக்கு யுஏ

img1130618041_1_1தனுஷின் மரியான் படத்துக்கு சென்சார் யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
தனுஷின் மரியானை பரத்பாலா இயக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பார்வதி ஹீரோயின். வன்முறை காட்சிகள் கொஞ்சம் தூக்கலாக இருப்பதால் படத்துக்கு யுஏ சான்றிதழ் வழங்கியது சென்சார்.
இந்தியாவில் யு சான்றிதழுக்கும் யுஏ சான்றிதழுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. யு என்றhல் குழந்தைகளும் பார்க்கலாம். யுஏ என்றhல் 18 வயதுக்குட்பட்டவர்கள் பெற்றோர் துணையுடன் பார்க்க வேண்டும். 18 வயதுக்குட்பட்டவர்கள் தனியாக வருகிறார்களா இல்லை துணையுடன் வருகிறார்களா என்று இத்தனை வருட சரித்திரத்தில் ஒரு திரையரங்கில்கூட பார்த்ததில்லை. ஆனால்,
படத்தை தயாரித்த ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் சின்னதாக அப்செட். யு சான்றிதழ் படங்களுக்கு மட்டுமே வரி விலக்கு அளிக்கப்படும். யுஏ என்றால் வரி என்ற பெயரில் பல லட்சம் துண்டு விழும். படத்தை ஜுன் 27 வெளியிடுகிறார்கள். இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறது, ரிவைஸிங் கமிட்டிக்கு போகலாமா என்று யோசித்து வருகிறார்கள்.

ரஜினி பற்றி நான் சொன்னதை தப்பா எழுதிட்டாங்க – நிருபர் மீது தனுஷ் வருத்தம்

18-dhanush-new-12-300ரஜினி பற்றி நான் சொன்னதை தப்பா எழுதிட்டாங்க – நிருபர் மீது தனுஷ் வருத்தம்சென்னை: ரஜினிக்கு மருமகனாக இருப்பதால் தனக்கு எந்த பலனும் இல்லை என்று தான் சொன்னதாக வந்தது தவறு என்றும், தான் சொன்னதை தவறாக எழுதிவிட்டார்கள் என்றும் தனுஷ் கூறியுள்ளார்.
ரஜினி பற்றி தனுஷ் அடிக்கடி எதையாவது பேசி வைப்பதும், பின்னர் அதற்கு விளக்கம் சொல்வதும் வாடிக்கையாகிவிட்டது.
முன்பு ஒரு முறை, ரஜினிக்கு மருமகனாக இருப்பது தனக்கு மைனஸ்தான் என்று ஒரு இணையதளத்துக்கு பேட்டி கொடுத்து, பின்னர் அதை மறுத்திருந்தார் தனுஷ்.இப்போதும் கிட்டத்தட்ட அதே போல பேச ஆரம்பித்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினிக்கு மருமகனாக இருப்பதால் எனக்கு எந்தப் பலனுமில்லை என்று அவர் கூறியதாக செய்திகள் வெளியாகின.ஆனால் இன்று அதை மறுத்துள்ளார் தனுஷ்.
இன்று சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடந்த அம்பிகாபதி பிரஸ் மீட்டில், அவரிடம் இதுகுறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.அதற்கு பதிலளித்த தனுஷ், "நான் சொன்னதை தவறான பொருளில் எழுதியுள்ளார் அந்த நிருபர். அவர் யார் என்று தெரியவில்லை. ரஜினியின் மருமகனாக இருப்பது எனக்கு பலமும் இல்லை, பலவீனமும் இல்லை என்றுதான் நான் கூறியிருந்தேன்.
இதை தனக்கு ஏற்ற மாதிரி எழுதியுள்ளார் அந்த நிருபர். ரஜினி அவர் வேலையில் பிஸியாக இருக்கிறார். நான் என் வேலையில் பிஸியாக இருக்கிறேன். அதே நேரம் அவரோடு என்னை ஒப்பிடுவது தவறு. நான் இருபத்தைந்து படங்கள்தான் பண்ணியிருக்கிறேன். அவரோ சினிமாவின் முகமாக இருக்கிறார். அவருடன் என்னை ஒப்பிடக் கூடாது," என்றார்.

தெற்கே சிங்கம் 2, வடக்கே போலீஸ்கி‌ரி

img1130618033_1_1ஜுலை 5 ஆம் தேதி ஹ‌ரியின் சிங்கம் 2 வெளியாகிறது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திராவிலும் இப்படம் வெளியாகிறது. கேரளாவில் தமிழில், ஆந்திராவில் யமுடு 2 என்ற பெய‌ரில் தெலுங்கில்.
ஹ‌ரி இயக்கிய போலீஸ் கதைகளில் சிங்கம் மற்றும் சாமி இரண்டும் முக்கியமானவை. சிங்கம் 2 வெளியாகும் அதே நாளில் சாமியின் இந்தி ‌ரிமேக்கான போலீஸ்கி‌ரியும் வெளியாகிறது.
போலீஸ்கி‌ரியை கே.எஸ்.ரவிக்குமார் இந்தியில் ‌ரிமேக் செய்திருக்கிறார். ஹ‌ரி கே.எஸ்.ரவிக்குமா‌ரிடம் அசிஸ்டெண்டாக வேலை பார்த்தவர் என்பது இன்னொரு சுவாரஸியமான தகவல். சஞ்சய் தத் சிறைக்கு சென்ற பின் அவரது நடிப்பில் வெளியாகும் முதல் படம் போலீஸ்கி‌ரி என்பதால் படத்தை பார்க்க இந்தி ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். போலீஸ்கி‌ரி 100 கோடியை தாண்டி வசூலித்தால் நன்றாக இருக்கும் என சிறைக்கு செல்லும் முன் சஞ்சய் தத் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆக, ஜுலை 5 தென்னகத்திலும், வடஇந்தியாவிலும் ஹ‌ரியின் படம்தான் ஹாட் டாபிக்காக இருக்கப் போகிறது.

யாயா’ படம் கிரிக்கெட் சூதாட்டகதையா?: டோனி, ஷேவாக் வேடத்தில் சிவா, சந்தானம்

07b4e878-31f6-406f-bbb8-2a80324d1655_S_secvpf.gifதற்போது தமிழ் சினிமாவில் காமெடி படங்கள் பெரிய அளவில் ஹிட்டாவதால் நிறைய நகைச்சுவை படங்கள் வெளிவருகின்றன. இதனால் காமெடி நடிகர்கள் பிசியாகிவிட்டனர். சம்பளத்தையும் கதாநாயகர்களுக்கு இணையாக உயர்த்தி விட்டனர்.
அதிகம் சம்பளம் வாங்கும் காமெடியர்கள் பட்டியலில் சந்தானம் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் நடிப்பில் 'தீயா வேலை செய்யணும் குமாரு', 'தில்லுமுல்லு' என இருபடங்கள் தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கின்றன.
தற்போது சந்தானமும் சிவாவும் இணைந்து 'யாயா' என்ற படத்தில் நடிக்கின்றனர். இதில் கிரிக்கெட் வீரர்கள் டோனி கேரக்டரில் சிவாவும் ஷேவாக் கேரக்டரில் சந்தானமும் வருகிறார்கள்.
சமீபத்தில் பரபரப்பாக கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாக வைத்து இப்படம் தயாராவதாக பேச்சு அடிபடுகிறது. இதுகுறித்து சிவாவிடம் கேட்டபோது:-
'யாயா படத்தில் எனது கேரக்டரை டோனி என்றும் சந்தானம் கேரக்டரை ஷேவாக் என்றும் அழைப்பதுபோல் காட்சிகள் வைக்கப்பட்டு உள்ளன. கிரிக்கெட்டுக்கும் இப்படத்துக்கும் தொடர்பு இல்லை. படம் பார்க்கும் போது எதற்காக அந்த பெயர்கள் வைக்கப்பட்டன என்பது புரியும்' என்றார்.

சினிமாவில் மீண்டும் பிரசன்னாவுடன் டூயட் பாடனும்: சினேகா

17-1371466215-sneha-prasanna-600சென்னை: 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் ஜோடியாக நடித்த பின்னர் உண்மையிலேயே கணவன் மனைவி ஆனார்கள் பிரசன்னா-சினேகா.
முதலில் வதந்திகளை மறுத்த காதல் ஜோடி, பின்னர் ஊரறிய திருமணம் செய்து கொண்ட கதை எல்லாரும் அறிந்ததே. விளம்பரங்களில் நடித்து வரும் இந்த நட்சத்திர ஜோடிக்கு வெள்ளித்திரையிலும் மீண்டும் ஜோடி சேரும் ஆசை துளிர் விட்டுள்ளதாம்.
வாய்ப்பு கிடைத்தால், கணவருடன் திரைப்படத்தில் ஜோடி சேர ஆசையாக இருக்கிறாராம் புன்னகை அரசி.