ஹரி இயக்கிய போலீஸ் கதைகளில் சிங்கம் மற்றும் சாமி இரண்டும் முக்கியமானவை. சிங்கம் 2 வெளியாகும் அதே நாளில் சாமியின் இந்தி ரிமேக்கான போலீஸ்கிரியும் வெளியாகிறது.
போலீஸ்கிரியை கே.எஸ்.ரவிக்குமார் இந்தியில் ரிமேக் செய்திருக்கிறார். ஹரி கே.எஸ்.ரவிக்குமாரிடம் அசிஸ்டெண்டாக வேலை பார்த்தவர் என்பது இன்னொரு சுவாரஸியமான தகவல். சஞ்சய் தத் சிறைக்கு சென்ற பின் அவரது நடிப்பில் வெளியாகும் முதல் படம் போலீஸ்கிரி என்பதால் படத்தை பார்க்க இந்தி ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். போலீஸ்கிரி 100 கோடியை தாண்டி வசூலித்தால் நன்றாக இருக்கும் என சிறைக்கு செல்லும் முன் சஞ்சய் தத் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆக, ஜுலை 5 தென்னகத்திலும், வடஇந்தியாவிலும் ஹரியின் படம்தான் ஹாட் டாபிக்காக இருக்கப் போகிறது.
No comments:
Post a Comment